அண்ணாமலைக்கு பிறகு உறுப்பினர்கள் இணைவது குறைந்துள்ளது.... எல்.முருகன்!!!

அண்ணாமலைக்கு பிறகு உறுப்பினர்கள் இணைவது குறைந்துள்ளது.... எல்.முருகன்!!!

அட்சய பாத்திரம் திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவுத் திட்டத்தை தாங்கள் தொடங்கி வைத்தது போல திமுகவினர் கூறி வருகின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்:

சென்னை சாலிகிராமத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையில்  பாஜக மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உடனான  ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

இலக்கு:

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகள் மற்றும் பூத் கமிட்டுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது எனத் தெரிவித்தார்.  மேலும் பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு இலக்கு வைத்து  பணியாற்றி வரும் 150 தொகுதிகளில் தமிழகத்தில் 9 தொகுதிகள் உள்ளன எனவும் தென் சென்னையை முக்கிய தொகுதியாக கருதுவதாஎன்றும் 2024 ல் தென் சென்னையில் பாஜக வெற்றி பெறும் வகையில் கட்சியினர் உழைத்து வருகின்றனர் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம்:

தமிழ்நாட்டில் கட்டமைப்புகளை உயர்த்த  கடந்த 9 ஆண்டு காலத்தில் மத்திய அரசு ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் இந்த ஓராண்டு மட்டும் மத்திய பட்ஜெட்டில்  6 ஆயிரம் கோடி ரயில்வேத்துறைக்கு ஒதுக்கப்பட்டும் 800 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 1000 கோடியல் தாம்பரம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  

மேலும் நேற்று முன்தினம்  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அமைச்சர் எனும் முறையில் சந்தித்ததாகவும்  வழக்கமான மரியாதை நிமித்தமான முறையில் நடைபெற்ற சந்திப்பு அது என்றும் கூறினார்.

கூட்டணி:

அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  திமுக கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது என்றும் அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது என்றும்  உள்துறை அமைச்சர் , மாநில தலைவர் அண்ணாமலை , கூட்டணி கட்சியான அதிமுக தலைவர்களும் இதை சொல்லி வருகின்றனர் என்றும் அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

தனித்து போட்டி:

அண்ணாமலை தனித்து போட்டியிடுவது குறித்து பேசியதாக கேள்விகு பதிலளித்த அவர் , உட்கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் இதுபோன்ற சில கருத்துகளை கூறுவது வழக்கம் தான் எனவும் அண்ணாமலை கூறிய கருத்தை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம் என்றும் அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் உறுப்பினர்கள் இணைவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர் எனக் கூறிய வேல்முருகன் அப்படியெல்லாம் ஏதும் கிடையாது எனவும் பாஜக தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது எனவும் கூறினார்.

அட்சய பாத்திரம்:

மேலும் அட்சய பாத்திரம் திட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் , அப்போதைய ஆளுநருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது எனவும் அந்த காலகட்டத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது ,திமுக ஆட்சிக்கு வந்தபின் அட்சய பாத்திரம் திட்டத்தில் உணவுக் கூடங்களுக்கு குடிநீர் , கழிவுநீர் , மின் இணைப்பு தரவில்லை , அந்த அமைப்பினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்டபிறகும் அவர்களை பார்ப்பதற்கு இன்று வரை முதலமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு:

அந்த திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவுத் திட்டத்தை தாங்கள் தொடங்கி வைத்தது போல திமுகவினர் சொல்லுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கலாசேத்ரா விசயத்தில் விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிக்க:   சிறப்பாக நடைபெற்ற குருத்தோலை பவனி...!!!