புதுக்கோட்டை: பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறி வந்த காளைகள்.. போட்டி போட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நல்லூரில் ஜல்லிக்கட்டும், விராலிமலை அருகே மஞ்சுவிரட்டும் உற்சாகத்துடன்  நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை: பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறி வந்த காளைகள்.. போட்டி போட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் மதுரை மாவட்டம்தான் நினைவுக்கு வரும் என்றாலும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது.

அந்தவகையில் தொண்டைமான் நல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் அடங்காத காளைகளுக்கும் சிறந்த மாடு பிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் அன்னவாசல் அடுத்த கீழ குறிச்சியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. இதில் சுற்றுக்கு இத்தனை ஆட்கள்தான் என்ற நிபந்தனை இல்லாததால் அதிக அளவிலான வீரர்கள் போட்டி போட்டு மாடுகளைப் பிடித்தனர். மேலும் நன்றாக களமாடிய காளைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டன.

மஞ்சுவிரட்டுப் போட்டிக்கு தனியாக பார்வையாளர் மாடம் இல்லை என்பதால், தறிகெட்டு ஓடிய காளைகள் முட்டியதில் 6 வயது குழந்தை உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.