சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது பொதுக்குழுதான் - இன்பதுரை

ஒற்றைத் தலைமை ஏற்படுத்த அதிமுக பொதுக்குழுவிற்கு முழு உரிமை உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கூறியுள்ளார்.

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது பொதுக்குழுதான் - இன்பதுரை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்,

அக்கட்சியின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் இருக்கும் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை, அதிமுக வழக்கறிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவிற்கே இருப்பதாக கூறினார். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது பொதுக்குழு தான் என்றும், அவரை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதும் இதே பொதுக்குழுதான் எனவும் இன்பத்துரை பேசினார். ஒற்றைத் தலைமை என்பது புதிய விதி அல்ல எனக்கூறிய இன்பதுரை, இதற்கு அதிமுக சட்டவிதிப்படி வழிவகை உள்ளதாக தெரிவித்தார்.