வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுகிறது திமுக அரசு...பி.ஆர். பாண்டியன்....!!

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை திமுக அரசு நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுவது நியாயமில்லை என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் .பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்  விவசாயிகளை ஏமாற்றுகிறது திமுக அரசு...பி.ஆர். பாண்டியன்....!!

டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள்,  காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த  உறுப்பினர்கள்  மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவினரும் கலந்து கொண்டனர்.  

 முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பி. ஆர்.பாண்டியன் கூறுகையில்,

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயிர் காப்பீடு இழப்பு தொகை வழங்குவது , நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கவும் , தமிழகத்தை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவிக்கவும், வேளாண் துறையில் பல ஆண்டுகளாக ஒரே மாவட்டங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணிமாற்றம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தினார்.

வேளாண் துறையில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே பெற்று வந்த சலுகைகள் பறிக்கப்படுவதாக கூறிய அவர், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என வேதனை தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை தான் கேட்பதாகவும் தங்களது கோரிக்கைகள் நியாயமானவை எனவும் அவர் தெரிவித்தார்.