" மத்திய அரசை குறைகூறாமல் காலிப் பணியிடங்களை நிரப்பினாலே போதும் " - ஓ பி எஸ். விமர்சனம்.

" மத்திய அரசை குறைகூறாமல்  காலிப்  பணியிடங்களை நிரப்பினாலே போதும் " -  ஓ பி எஸ். விமர்சனம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திமுகவின் தேர்தல் அறிக்கையில்,  திமுக எதிர்கட்சியாக இருந்த போதே  பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பினை தற்போதய முதலமைச்சர் முக ஸ்டாலின் பெற்றுக்கொடுத்ததாக விளம்பரப்படுத்தப்படுத்துவதாக குறிப்பிட்டு,  முக. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசுத் துறைகளிலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ வேலைவாய்ப்பினை வழங்க இயலாத நிலையில் எதிர்க்கட்சியாக இருந்த போதே வேலை வாய்ப்பு  வழங்கியதாக சொல்லுவது, " கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவானாம்' என்ற பழமொழியை நினைவு படுத்துவதாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். 

மேலும், அனைத்து துறைகளிலும், பள்ளி கல்லூரிகளிலும், பொதுத் துறைகளிலும், காலியாக உள்ள இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வெளிமுகமை  மூலம் ஆட்களை நியமிப்பது, ஒப்பந்த முறையில் ஆட்களை  சேர்ப்பது, மற்றும் ஒய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தான் திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறது என்றும் சாடினார்.

அதோடு, தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் கம்மியர் வேலைகளுக்கு உரையாக பயிற்சி பெற்றும், முறையாக பதிவு செய்தும்  பணிசெய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறிருக்க, இரண்டு ஆண்டு காலமாக  இவர்களை பணியமர்த்த தமிழக அரசு எந்த வித நடவடிக்கையுயுமே எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், வெளிமுகமை மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை அண்மையில் பணியமர்த்தினர். இதற்கு ஏற்கனவே பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது ஒய்வு பெற்ற ஓட்டுநர் நடத்துனர்களை  குறைந்த தொகுப்பூதியத்திற்கு பணியமர்த்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் சுட்டிக்காட்டி, இந்த முடிவால் பல இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். அதோடு, வேலையில்லா திண்டாட்டத்தை குறித்து மத்திய அரசிய குறை கூறுவதாய் மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளதாக இருப்பதாகவும், அப்படி குறை கூறுவதை விடுத்து காலிப்பணியிடங்களி இளைஞர்களைக் கொண்டு நிரப்பி வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை  எடுத்தாலே தமிழகத்தில் 5 இலட்சம்  குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலோங்கும் என்று கருது தெரிவித்துள்ளார். 

வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய அரசை குறை கூறுவதற்கு முன்னர், தமிழ்நாட்டில் காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை,  அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள  25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை, இளைஞர்களை கொண்டு நிரந்தரமாக நிரப்பி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...!