குடியரசு தின விழா நடத்துவதில் சிக்கலா?

குடியரசு தின விழா நடத்துவதில் சிக்கலா?

குடியரசு தின நிகழ்ச்சிக்கான இடம் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசு தின விழா நடத்துவதில் சிக்கலா?:

குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் மெரினா கடற்கரை காந்திசிலை முன்பாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைப்பெறும். ஆனால், தற்போது  மெட்ரோ பணிகள் நடந்து வருவதன் காரணமாக இந்தாண்டு அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசு தின நிகழ்ச்சிகளை எங்கு நடத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டம் வாரியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை இதோ...!

ஏற்கனவே, ஆண்டுதோறும் நடைபெறும் காமராஜர் சாலையிலேயே வேறு இடத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் மற்றும் உழைப்பாளர் சிலை முன்பாக நடத்தலாம் என இரண்டு இடங்களை தேர்வு செய்திருந்தது.

தற்போது, இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இரண்டில், எந்த இடத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று இறுதி செய்யப்பட உள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் விவேகானந்தர் இல்லமே குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.