தமிழகத்தில் அதிகரிக்கிறதா புற்றுநோய் பாதிப்பு..? ஐ.சி.எம்.ஆர் தகவல் வெளியீடு!

தமிழகத்தில் புற்றுநோய் அதிகரித்து வருகிறதா என்பது குறித்து ஐ. சி. எம். ஆர் சார்பில் புற்றுநோய் பாதிப்புகள் மீதான தகவல்கள் வெளியீடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கிறதா புற்றுநோய் பாதிப்பு..? ஐ.சி.எம்.ஆர் தகவல் வெளியீடு!

தமிழகத்தில் புற்றுநோய் அதிகரித்து வருகிறதா என்பது குறித்து ஐ. சி. எம். ஆர் சார்பில் புற்றுநோய் பாதிப்புகள் மீதான தகவல்கள் வெளியீடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புற்று நோய் மீதான பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறையின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்பகப் புற்றுநோய் ,  கர்ப்பப்பை புற்றுநோய் உட்பட புற்றுநோய் மீதான பாதிப்புகள் குறித்து ஐ சி எம் ஆர் மேற்கொண்ட ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 40.75 லட்சம் பேர் புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டு 13.25 லட்சம் பேரும் , 2019 ஆம் ஆண்டு 13.58 லட்சம் பேரும், 2020 ஆம் ஆண்டு 13.92 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4.99 லட்சம் பேரும் , அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.40 லட்சம் பேரும் , மேற்கு வங்கத்தில் 3.17 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 2020 ஆம் ஆண்டு  88,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் புற்றுநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பொறுத்தவரை நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் உயிரிழப்புகள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1.41 லட்சம் பேரும் அடங்குவர் என ஐசிஎம்ஆர் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.