ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு தேவைதானா...? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு தேவைதானா...? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது ஜனநாயகத்துக்கு தேவைதானா என பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஆளும் கட்சியான திமுகவும், தங்களது கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஆளும் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்து வருவதாகவும், வாக்காளர்களை அடைத்து வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு...!

இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற மறைந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.சரவண பெருமாளின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில்,  பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

2009-ம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலை விட 100 மடங்கு மிஞ்சும் அளவுக்கு ஈரோடு கிழக்கு தேர்தல் நடைபெறுவதாகவும், இப்படியொரு தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு தேவைதானா என்றும் கேள்வி எழுப்பினார.