இது இருந்தா நல்லது.. தமிழகத்தை 2 நாட்களுக்கு கைப்பற்றும் சூரியன்.. இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்!!

தமிழகத்தில் இரு தினங்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது இருந்தா நல்லது.. தமிழகத்தை 2 நாட்களுக்கு கைப்பற்றும் சூரியன்.. இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்!!

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக, 16ம் தேதியன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17ம் தேதி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 18ம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2  டிகிரி செல்சியஸ் வரை 
அதிகமாக இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.