கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கான்கிரீட் பணிகளில் முறைகேடு - வழக்கு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கான்கிரீட் பணிகளில் முறைகேடு - வழக்கு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லை மாவட்டத்தில் திடியூர் தலையணை நீர்ப்பிடிப்பு வெளிப்பகுதியில் தரமற்ற முறையில் கான்கிரீட் அமைத்த பணிகளை  துளையிட்டு ஆய்வு செய்யுமாறும், முறைகேடு ஈடுபட்ட  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு.


நெல்லை மாவட்ட  நீர்வள ஆதார அமைப்பின்  பொறியாளர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் கீழ் வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதில், திடியூர் தலையணை நீர்ப்பிடிப்பு வெளிப்பகுதியில் தரமற்ற முறையில் கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. 

பல இடங்களில் கான்கிரீட் கம்பி வெளியில் தெரிகிறது. தலையணை இரும்பு கதவுகள் துருப்பிடித்துள்ளன. வெள்ளங்குழி தலைமதகு முதல் மூலகரைப்பட்டி வரையிலான ஜீப் பாமையில் பள்ளங்கள் உள்ளன. தரமற்ற கான்கிரீட்டால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, தலைமதகு கான்கிரீட் பணிகளையும் துளையிட்டு ஆய்வு செய்யுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | ஈரோட்டில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 2,460 குடியிருப்புகள்.

இந்த மனு  நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரனைக்கு வந்தது
மனுவிற்கு பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வை பொறியாளர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5க்கு தள்ளி வைத்தனர்.