விசாரணைக்கு சென்ற நபரை அரை நிர்வாணத்துடன் தாக்கிய காவல் ஆய்வாளர்

திருப்பத்தூர் அருகே விசாரணைக்கு சென்ற நபரை காவல் ஆய்வாளர் அரை நிர்வாணத்துடன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விசாரணைக்கு சென்ற நபரை அரை நிர்வாணத்துடன் தாக்கிய காவல் ஆய்வாளர்

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கண்ணாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன், சோனியா காந்தி தம்பதி. இவர் அதே பகுதியில் 26 பேரை கொண்டு விவசாய சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களாக யாரும் சீட்டு கட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சரவணனுடன் இருந்த சசிகுமார் என்பவர் சீட்டு நடத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் சோனியா காந்திக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரும் படி கூறியுள்ளார்.

தன்னுடைய கணவர் சரவணன் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி தம்பி சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் சோனியா காந்தி. அப்பொழுது கந்திலி காவல் ஆய்வாளர் மணிமாறன் யார் என்ன என்பதை விசாரிக்காமலேயே சம்பந்தமே இல்லாத சங்கரை சக காவலர்களுடன் சேர்ந்து அடித்து அரை நிர்வாணத்துடன் அமரவைத்து துன்புறுத்தியுள்ளார்.

அப்போது யார் என்பதை விசாரிக்காத ஆய்வாளர் மணிமாறன் சங்கரை அரை நிர்வானத்துடன் தாக்கியுள்ளார். மேலும் தடுக்க சென்ற சோனியா காந்தியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சோனியா காந்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சங்கர் காவல் ஆய்வாளர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.