ரயில் நிலையத்தில் தவறான ஒலிபெருக்கி அறிவிப்பு...

தாம்பரம் ரயில் நிலையத்தில் தவறான ஒலிபெருக்கி அறிவிப்பு பயணிகள் அவதி!

ரயில் நிலையத்தில் தவறான ஒலிபெருக்கி அறிவிப்பு...

இன்று காலை 8.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தின் ஏழாவது நடைமேடையில் வந்து சென்ற வண்டி எண் 06795 சென்னை திருச்சி சோழன் விரைவு ரயிலின் D-1 கோச் 16வது பெட்டியாக வருமென ஆட்டோமேட்டிக் ஒலிபெருக்கியில் இரு முறை அறிவிக்கப்பட்டது.

அப்பேட்டியில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனர். ஆனால் 8.35 மணிக்கு வந்த அந்த ரயிலின் D-1 கோச் எஞ்சினில் இருந்து நாலாவது பெட்டியாக இணைக்கப்பட்டிருந்தது. இடையில் சுமார் 10 பெட்டிகள் இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதியோர் உள்ளிட்ட சுமார் 20 பயணிகள் அவதிப்பட்டு வெவ்வேறு பெட்டிகளில் ஏறி பின்னர் உள்புறம் ஆகவே d-1 பெட்டியை சுமார் 10 நிமிடம் கழித்து வந்து அடைந்தனர். இந்த அவதிக்கு காரணமான அஜாக்கிரதையாக செயல்பட்ட தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பயணிகளின் கோரிக்கை.