செங்கல்பட்டு மாவட்டத்தில் தர்பூசணி அறுவடைப் பணிகள் தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை துவக்கம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்  தர்பூசணி அறுவடைப் பணிகள் தீவிரம்

கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாய பணிகளை காலதாமதமாக தொடங்கினர்.

இந்த நிலையில் குறுகிய சாகுபடி பயிராக விளங்கும் கொடி பயிரான தர்பூசணி சொட்டு நீர் பாசனம் மூலம் அதிகளவு விவசாயம் செய்திருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பவுஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு தர்பூசணி சாகுபடி செய்தனர் . இந்த நிலையில் தற்போது தர்பூசணி அறுவடை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு அறுவடை செய்யும் தர்பூசணி கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது .

தற்போது ஓரு டன் தர்பூசணி 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் சில நாட்களில் தர்பூசணி அதிக அளவு அறுவடை செய்யும் நேரத்தில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.