நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் ... அலுவலர்களுக்கு இன்று 3ம் கட்ட பயிற்சி!!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள மத்திய,  மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்று வருகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் ... அலுவலர்களுக்கு இன்று 3ம் கட்ட பயிற்சி!!

தமிழகம் முழுவதும் நாளை நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் வாக்குபதிவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதன்படி நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள மத்திய,  மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க உள்ள அலுவலர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் கடந்த அலுவலர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பயிற்சி மையங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சிகள் முறையே ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 10-ம் தேதிகளில் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.