கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்

கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய காலத் தமிழர்கள் பயன்படுத்திய, பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு பண்டைய கால தமிழர்களின் வாழ்வியல், வணிகம், நெசவு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 2015-ம் ஆண்டுமுதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அகழாய்வு பணிக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, கீழடியில், தொல்லியல் துறை சார்பில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கீழடியில் வீரணன் என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு கண்டறியப்படும் பழங்காலப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட நிரந்தர கூடாரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.