கட்சி மோதலில் காயம்... அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்!!

கட்சி மோதலில் காயம்... அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி சாலையில் நாம்தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

வாக்குவாதம்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வீரப்பன் சத்திரம் பகுதியில் பேரணியாக சென்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.  அப்பொழுது 17வது வார்டு, சிவா வீதியில் பேரணியாக சென்ற போது திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

கலவரம்:

அந்த வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பு, கல் வீச்சு, கட்டையால் தாக்கிக்கொள்வது போன்ற மோதல்கள் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது.  உடனடியாக காவல்துறை இருதரப்பு மோதல்களை கட்டுப்படுத்தியது.  இதில் 10க்கும் மேற்பட்ட, திமுக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அமைச்சர் ஆறுதல்:

இந்நிலையில் நாம்தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.  மேலும் தாக்குதல் நடத்திய பணிமனை பகுதியை பார்வையிட்டு காயம் அடைந்தவர்ரகளின் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

ஆலோசனை:

காவேரி சாலையில் உள்ள திமுக தேர்தல் பணிமனை பகுதியில் தாக்குதல் நடத்திய இடத்தையும் காயமடைந்தவர்களின் நிலவரம் குறித்தும் மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அறிவுரை:

மேலும் வாக்குசேகரிக்க செல்லும் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி  அமைதியான முறையில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:   தொண்டர்களின்றி வெறிச்சோடிய ஓபிஎஸ் வீடு...!