ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனைகள் உலக சாதனை...!

ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனைகள் உலக சாதனை...!

ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனைகள் உலக சாதனை படைத்தனர்.  ஆசிய கோப்பை வில்வித்தை போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் 21 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் காம்பவுண்ட் பிரிவில்  சாக்சி, தீப்சிகா, பிரகதி ஆகியோர் அடங்கிய இந்திய வீராங்கனைகள் 2 ஆயிரத்து 76 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தனர். 

இதற்கு முன் 2 ஆயிரத்து 75 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருந்த நிலையில்,  தற்போது அந்த சாதனையை இந்திய மகளிர் அணியினர் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க      |   அமித்ஷா வருகை : ஆத்திரமடைந்த பாஜகவினர்...! நடந்தது என்ன...?

சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா 232-234 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 235-238 என்ற கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்தது.

மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.

ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் பார்த் சலுங்கே 2-6 என்ற கணக்கில் சீனாவின் ஜியாங்ஸுவிடம் தோல்வி அடைந்து வெளிப் பதக்கம் பெற்றார். மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருமா பிஸ்வாஸ் 2-6 என்ற கணக்கில் சீனாவின் அன் குயிஸுவானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரில் இந்தியா 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5-வது இடம் பிடித்து நிறைவு செய்தது.

இதையும் படிக்க      |   கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை இன்று தொடக்கம்......!