"டி.எம்.சௌந்தரராஜன் சாலை" பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

"டி.எம்.சௌந்தரராஜன் சாலை" பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு "T.M.சௌந்தரராஜன் சாலை" என பெயர் சூட்டி, காணொளி காட்சி வாயிலாக பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

இந்நிலையில் இதற்கான பெயர் பலகை திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பலகையை திறந்து வைத்தார்.

இதையும் படிக்க : நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை ஆகியவற்றையும் முதலமைச்சர் வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில்  டி.எம்.சௌந்தரராஜன் நினைவாக இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.