உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா.. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்சுக்கு அழைப்பு..!

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா.. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்சுக்கு அழைப்பு..!

அமைச்சர் உதயநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம் பெறுகிறார் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர். என்.ரவிக்கு பரிந்துரை செய்தார்.

அரசியல் ஈடுபாடு

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி, முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நிலையில் இன்று (டிசம்பர் 14) காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது, ஆளுநர் ஆர். என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க: உதயநிதி அமைச்சர் பொறுப்பு ஏற்பது எனக்கு சந்தோஷம் - நடிகர் விஷால்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் தேர்தலின் போது திமுகவிற்காக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அதனை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபை உறுப்பினரானார் உதயநிதி.

எதிர்க்கட்சிக்கு அழைப்பு

உதயநிதி அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.