கடந்த 2 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு 12,679 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பேட்டி!

கடந்த 2 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு 12,679 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பேட்டி!

கடந்த 2 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 679 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் , திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022 - 2023 வரை 16 லட்சத்து 46 ஆயிரம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகள் பெற்ற 5 ஆயிரத்து 13 கோடி ரூபாய் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு துறை சார்பில் 20 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவில் கடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : அளவுக்கு அதிகமான சத்து மாத்திரை...உயிரை விட்ட மாணவி...உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பேட்டி!

தொடர்ந்த பேசிய அவர், தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு சங்கங்களின் கட்டமைப்பு உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், கணவனை இழந்து தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்கி வருவதாகவும், நவீன சாதனங்களை பயன்படுத்தி எல்லாவிதமான சேவைகளை செய்யும் வகையில் கூட்டுறவு  வங்கிகள் மேம்படுத்தப்படும் என்றும், கூட்டுறவு சங்கம் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு உரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.