புதுக்கோட்டையில் இரண்டு கிராம மக்களின் பல்லாண்டு கால கனவு நனவானது...!

புதுக்கோட்டையில் இரண்டு கிராம மக்களின்  பல்லாண்டு கால கனவு நனவானது...!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவுக்கு உட்பட்டது தூவார் மற்றும் ஆத்தங்கரை விடுதி கிராமம் . இந்த இரு கிராமத்திலும் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி விவசாய பகுதி என்பதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கந்தர்வகோட்டை பகுதிக்கு எடுத்துச் செல்ல அக்னி ஆற்றுக்கு குறுக்கே பாலம் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். 

மேலும் மழைக்காலங்களில் மக்கள் தங்கள்  கிராமத்திலிருந்து கந்தர்வகோட்டை செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக சுற்றி செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில் இது குறித்து இரு கிராம பொதுமக்களும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையிடம் கோரிக்கை வைத்த நிலையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் பாலம் அமைப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர்களும் தமிழ்நாடு முதலமைச்சர்களும் உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுப்பணித்துறை நிதியிலிருந்து ரூபாய் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்னி ஆற்றில் துவார் பகுதியிலிருந்து ஆத்தங்கரை விடுதி கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க    } தஞ்சையில் மாமன்ற கூட்டத்தின் போது திமுக, அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு...!

மேலும் இரண்டு கிராம மக்களின் பல்லாண்டு கால கனவை நினைவாக்க பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து கட்டுமான பணியையும் தொடங்கிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிக்க    } விருத்தாசலம், கும்பகோணம் தனி மாவட்டம்...! உடனடியாக உருவாக்க சீமான் வலியுறுத்தல்...!!