பழனி முருகன் கோவிலில்,.... மாற்றுத்திறனாளிகள் போராட்டம்,..!

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக.....

பழனி முருகன் கோவிலில்,....  மாற்றுத்திறனாளிகள்  போராட்டம்,..!


பழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சமையல் செய்ய காவல் துறையினர் அனுமதி மறுக்கபட்டதால் காவல் துறையினருடன் மாற்றுதிறனாளிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள், கை குழந்தைகளுடன் வருபவர்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் தனி வழி என்று பதாகைகள் வைத்துவிட்டு மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக தர குறைவாகவும் பேசுவதாகவும் வெளியே செல்லுமாறும் ஊழியர்கள் சொல்வதாக  கூறி பழனியில் அமைக்கப்பட்ட மனநல காப்பகத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனவும், 

இதையும் படிக்க     } "எடப்பாடியுடன் நாங்களும் இணைய தயார்....!" - திருமாவளவன் .

 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை கோவில் நிர்வாகம் செய்து தராததை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பாக குவிந்துள்ளனர். 

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் சமையல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் துறையுடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இதையும் படிக்க     } 'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!