திமுக அரசில் மதுவுக்கு முக்கியத்துவம், சட்டம் சீர்குலைந்து வருகிறது - ஜி.கே.வாசன்

திமுக அரசில் மதுவுக்கு முக்கியத்துவம்,  சட்டம் சீர்குலைந்து வருகிறது  - ஜி.கே.வாசன்

 மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக கூறிவிட்டு தற்போது படிப்படியாக மதுவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது - தமாக தலைவர் ஜி கே வாசன்.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து மறுப்பு தெரிவிப்பதை எந்த தரப்பு மக்களும் ஏற்கவில்லை ஆனால் உண்மை நிலையை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் இதற்கு உண்டான விசாரணை நடத்தப்பட வேண்டும் .

" ஓரிரு நாட்கள் கர்நாடக தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரசரம் மேற்கொள்ள உள்ளதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்" 

சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணியின் 14 வது செயற்குழு கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி கே வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில்  முக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தாமாக போய் சேர்ந்த இளைஞர்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ,

இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 97% கலந்து கொண்டுள்ளன. வரும் நாட்களில் இயக்கத்தின் பலத்தை வளர்ப்பதற்காகவும் இளைஞர் அணி மக்கள் பணிகளை சிறப்பாக செய்து இயக்கத்திற்கு வலுவை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

tasmac, தானியங்கி மது விற்பனை: 21 வயதை கடந்தவர் என்பதை ஊழியர்கள் எவ்வாறு  உறுதி செய்வார்கள்? - how does the automatic liquor vending machine  supervisors verify that a person is over 21 ...

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக கூறிவிட்டு தற்போது படிப்படியாக மதுவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் என பொது இடங்களில் மது விற்பனையை திமுக அரசு துவங்கி உள்ளது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது. மது கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் எந்த நிலையிலும் கிடைக்கக்கூடிய நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பணி எனவும் அனைத்து தரப்பு மக்களும் இதனால் அடையும் பாதிப்பு குறித்து அரசு உணர வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க | கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை” அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்!

மேலும் மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் சரிவர செயல்படுத்துவதில்லை. போக்குவரத்து மின் தட்டுப்பாடு ரேஷன் கடைகள் சுகாதாரத் துறை வேலை பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் தரவில்லை எனவும் தமிழகத்தில் திமுகவின் மக்கள் விரோத போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறதாக  குற்றம் சாட்டினார். 

கலைஞர் கருணாநிதி நினைவுச் சின்னமான பேனாவை கடலில் வைப்பதற்கு மத்திய அரசு கொடுத்து இருக்கிற விதியை பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.  தூத்துக்குடியில் விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தான் மணல் கொள்ளையை ஆதரிக்கிறது எனவும் இதை தடை செய்யாமல் அரசு செய்து கொடுத்துவிட்டு எனவும் அரசு அதிகாரிகளுக்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடியில் விஏஓ வெட்டிக் கொலை - பின்னணியில் மணல் மாஃபியாக்களா? - BBC  News தமிழ்

ஓரிரு நாட்கள் கர்நாடக தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரசரம் மேற்கொள்ள உள்ளதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்த மறுப்பை எந்த தரப்பு மக்களும் ஏற்கவில்லை ஆனால் உண்மை நிலையை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் இதற்கு உண்டான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க | பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாமக தொடங்கியுள்ளது எங்களது பணி தேர்தல் வரை தொடரும் எனவும் பாஜக தாமாக அதிமுக மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை பெறுவோம் என கூறினார்.தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு, அந்த அந்த மாநிலத்தின் பாடல் தான் முதலில் இடம்பெறும்  அந்த வகையில் தமிழ்த்தாய் பாடல் ஆரம்பத்திலேயே  நிறுத்தப்பட்டது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை  கொண்டுவர வேண்டாம் என கூறினார்.