" அறிவிப்பை திரும்பப் பெறவில்லை எனில்,... டி.கே.சிவக்குமார் இல்லத்தை முற்றுகையிடுவோம்...! " - செல்ல.ராசாமணி.

" அறிவிப்பை திரும்பப் பெறவில்லை எனில்,... டி.கே.சிவக்குமார் இல்லத்தை முற்றுகையிடுவோம்...!   " -  செல்ல.ராசாமணி.

மேகதாதுவில் அணைக் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறவில்லை எனில், கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர்  டி.கே.சிவக்குமார் இல்லத்தை முற்றுகையிடுவோம் என விவசாய முன்னேற்றக் கழக தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்துள்ளார்.

விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.  

அப்போது அவர் கூறுகையில்:-  

" கர்நாடகா பொதுப்பணித்துறை அமைச்சர் சிவக்குமார் காவேரியின் ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, ஏற்கனவே மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது மேலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அனுமதி அளிக்க வில்லை" . 

இதையும் படிக்க    | ”மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

" இதுகுறித்து தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டப்படாது  என கர்நாடகா பொதுப்பணித்துறை அமைச்சர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். அமைச்சர் சிவக்குமார் தெரிவித்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி கர்நாடகாவில் உள்ள டி. கே சிவக்குமார் இல்லத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்",  என்றார்.

மேலும்,  "வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். மாவட்டம் நிர்வாகம் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசவில்லை", என்று கூறிய அவர், " விவசாயிகளை அழைத்து உடனடியாக பேசி சுமுக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்",  என தெரிவித்தார்.

இதையும் படிக்க    | " வேகமெடுக்கும் மேகதாது பணி...! தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும்..! " - இராமதாசு அறிக்கை.