முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்வி குறி தான்....சீனிவாசன்...!!

திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான் என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்வி குறி தான்....சீனிவாசன்...!!

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில், 

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றும் இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி காலணியை வீசியுள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமன் தற்பொழுது அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக தான் மாறிவிட்டது என கூறினார்.


அதிமுக முன்னாள்  அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு  அவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான். இதனை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலை மறைவு குறித்து கேட்டபோது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் அதை பற்றி எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு விட்டது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.