மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசு காலம் தாழ்த்தினால் மாநில அரசே கட்டும்...மா.சுப்பிரமணியன் அதிரடி!

மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசு காலம் தாழ்த்தினால் மாநில அரசே கட்டும்...மா.சுப்பிரமணியன் அதிரடி!

மதுரை எய்ம்ஸ் பணிகளை, மத்திய அரசு மேற்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசே தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் 15 நகர்ப்புற ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடம், ஆய்வகங்களை ஆனையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மதுரை திருமங்கலத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம்  அமைய உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இடத்தை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.  

இதையும் படிக்க : எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் அடுத்த மாதம்? நிதிஷ் குமார் சொன்ன அடுத்த அப்டேட்!

தொடர்ந்து ஆனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில், 155 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் டவர் பிளாக் கட்டிடம் இரண்டரை மாதத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என கூறினார். 

மதுரை எய்ம்ஸ் பணிகளை, மத்திய அரசு மேற்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசே தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் உள்ளார் எனவும், அவரின் உடல்நிலை குறித்து சந்தேக பேர்வழிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் பதிலடி கொடுத்தார்.