" மோடி ஆட்சி அமையவில்லை என்றால்,.. 'பிச்சைக்கார நாடாக' இந்தியா மாறியிருக்கும் " - ஹெச்.ராஜா.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த ( பாட்னா ) கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்?...

" மோடி ஆட்சி அமையவில்லை என்றால்,.. 'பிச்சைக்கார நாடாக'  இந்தியா மாறியிருக்கும் " - ஹெச்.ராஜா.

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் ஆனால் சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என திருமாவளவனின் கருத்தை தான் ஏற்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொிவித்துள்ளார். 

பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் 9 ஆண்டு கால அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி நடைபெற்றது. இதனை, பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான ஹெச்.ராஜா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 

பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் நாட்டின் குடிமகனாக உள்ள ஒவ்வொருவரும் அரசியலுக்கு வரலாம் என்றும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கூறியவர்,  சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற  திருமாவளவனின் கருத்தை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து, ப.சிதம்பரத்தின் கருத்து குறித்த கேள்விக்கு:-  இந்த நாட்டை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ப.சிதம்பரம் அவர் அதிகமாக பேசக்கூடாது எனவும் 2016 மோடி ஆட்சி அமையவில்லை என்றால் பிச்சைக்கார நாடாக இந்தியா மாறியிருக்கும் என்றும் தெரிவித்தார்.  மேலும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த ( பாட்னா ) கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் சி.பி.ஐக்கு தமிழகத்தில் இருந்த அனுமதி நீக்கம் குறித்த கேள்விக்கு:-  மெட்ரோ ரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐக்கு புகார் அளித்துள்ளார்கள். ஆறாவது நபராகவே அண்ணாமலை சி.பி. ஐயில் புகார் அளித்துள்ளார் என்றும் அதில் ஸ்டாலினை சி.பி.ஐ நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் விசாரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

 திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியத்திடம் திமுக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறித்த கேள்விக்கு:-   திமுக எம்.பி ஞான திரவியம் பாதிரியார் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஆனால் எம்.பி யிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது திமுகவின் கண்துடைப்பு நாடகம் எனவும்,  மணிப்பூர் கலவரம் என்பது நீண்ட நாட்களாக நடப்பதே. பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டம் நடத்தியுள்ள நிலையில் மணிப்பூர் கலவரம் விரைவில் முடிவுக்கு வரும். என்றும் கூறினார்.

மேலும், சிதம்பரம் தீட்சிதர்கள் குறித்த கேள்விக்கு:-  சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு என்பது பொய் வழக்கு என்றும் அறநிலையத்துறை அங்கு செல்லவே அதிகாரமில்லை. என்றும் சட்ட திட்டங்கள் குறித்து அறியாதவர்களே அமைச்சராக இருப்பதாகவும் அமைச்சர் சேகர் பாபு குறித்து பேசியதுடன் பீகாரில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டம் என்பது அமலாக்கத்துறையால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம் என பேசியதுடன் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். 

 சீமானின் பா.ஜ.க நிலைப்பாடு குறித்த கேள்விக்கு:-  சீமான் தமிழ் தேசியத்தை கைவிட்டால் பா.ஜ.கவுடன் நெருங்கிவரலாம் என்றும் தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம், இந்திய தேசியம் என்பதே ஒற்றுமை என்றும் சீமான் பகுத்தறிவோடு சிந்தித்து தமிழ் தேசியத்தை கைவிட்டால் வரவேற்போம் என பேட்டியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க    | ”சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கருணாநிதி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!