துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்கள் வந்தால்... எடப்பாடி பழனிசாமி!!

துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்கள் வந்தால்... எடப்பாடி பழனிசாமி!!

அதிமுக - பாஜக கூட்டணி, எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சரின் மௌனம்:

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.  அமித்ஷாவின் இல்லத்தில் சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நிதியமைச்சரின் ஆடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிமை கட்சி இல்லை:

மேலும், அதிமுக - பாஜக கூட்டணி எந்த பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் எனவும், அதிமுக, யாருக்கும் அடிமை கட்சி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும், தங்களுடைய கூட்டணியில் செயல்படுகின்ற கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சிகள் எனவும், திமுக கூட்டணிகள் போல அடிமை கட்சியல்ல எனவும் விமர்சித்துள்ளார்.  

பி அணி:

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும், சிஏஜி அறிக்கையில் நிதி திருப்பி அனுப்பப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.   மேலும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் எனவும், திமுகவின் பி அணியாக ஓ.பி.எஸ் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டினார்.

இதையும் படிக்க:  அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்... கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கும் அதிகாரிகள்!!