சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸால் முடிவுக்கு வந்த பிரச்சினை...!!!

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸால் முடிவுக்கு வந்த பிரச்சினை...!!!

பேரவையில் பெரிய சத்தம் போடக்க்கூடாது என சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் அப்பாவு எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை தொடர்பான துணைக் கேள்விக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எழுந்து பேசினார்.  அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், எழுந்து பேசிக் கொண்டே இருந்தார் வேல்முருகன்.

இதனால் கோபமடைந்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடரில் வேல்முருகனுக்கு 4 துணைக் கேள்விகளுக்கு  அனுமதி அளித்திருப்பதாகவும், முன்வரிசையில் உள்ளவர்களுக்கு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும், எதற்கெடுத்தாலும் தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று எந்த மரபும் இல்லை எனவும் உங்களைப் போல் 20 பேர் கேட்டிருக்கிறார்கள் எனக் கூறியதோடு இது போன்று அவையில் பேசக்கூடாது எனவும் பெரிய சத்தம் போடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய ஓபிஎஸ் சபாநாயகர் கனிவான ஆசிரியரா? கண்டிப்பான ஆசிரியரா? என கேட்டதால் பிரச்சனை முடிவிற்கு வந்தது.

இதையும் படிக்க:  பாஜகவின் வெற்றிக்கு அதிமுக முக்கியம்... அமித் ஷாவிற்கு விளக்கிய தம்பிதுரை!!!