எனக்கு திமிரு அதிகமாவே இருக்கு.....சீமான்....!!

நாங்கள் பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள், எங்களுக்கு கூடுதல் திமிரு இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

எனக்கு திமிரு அதிகமாவே இருக்கு.....சீமான்....!!

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் தமிழக அரசை கண்டித்தும்,  பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாகை அவுரித்திடலில், நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்,

20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களையும், 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம்,  இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. என் மக்களுக்கு ஆதரவான போராட்டம் என்றார்.

மேலும்  எங்கள் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்துவோம்  என கூறிய அவர்,  திமுகவினர் தங்களை  எதிர்ப்பதை வரவேற்பதாகவும்,  வடசென்னை படத்தில் வருவதுபோல, இது என் நாடு, என் நிலம் என்றும் அதை பாதுகாப்பதற்காக நாங்கள் சண்டை செய்யணும் இல்லையா? என்றார்.

மேலும் பிரபாகரன் பிள்ளைகளான நாங்கள் கொடி பிடிப்பதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பயந்தால் என்ன ஆவது? அவர்கள் எம்ஜிஆர், கருணாநிதியை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள், நாங்கள் பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். எனவே எனக்கு அவர்களை விட கூடுதல் திமிரு இருக்கிறது என கூறினார்.

நான் செருப்பு காட்டியதை, சாதாரணமாக விட்டு விட கூடாது என்று திருமாவளவன் பேசியிருக்கிறார். நான் அவருக்கு எதிராக காட்டவில்லையே. அவர் எனக்கு எதிராக பேசலாம். நான் அவருக்கு எதிராக பேசுவதில்லை. இனியும் பேச போவதில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், குஜராத்தில் மீனவர்கள் மீது காட்டும் அக்கறையை தமிழக மீனவர்கள் மீதும் காட்ட வேண்டும் என தெரிவித்தார்.