அட இவர தெரியல!!!!!!! இவருதான் கேசவ விநாயகம்

சமூகவலைதளங்களை திறந்தாலே யாருப்பா அந்த கேசவ விநாயகம் எனக்கே பார்க்கணும் போல இருக்குன்னு தான் எஙகபார்த்தாலுமே மீம்ஸ் இருக்கு ...

அட இவர தெரியல!!!!!!! இவருதான் கேசவ விநாயகம்

நெட்டிசன்களுக்கு வார இறுதியில் ஏதாவது கண்டென்ட் கிடைக்குமானு தேடும்போது பாஜகவில்  சூர்யா சிவா மற்றும் டெய்சி  அவர்களின்  உட்கட்சி விவகாரம்  பிரச்சனை  தொடர்பாக தனியார் ஊடகத்தின்  நேர்காணலில் பாஜக மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் டெய்சி கலந்துகொண்டார்.

மேலும் படிக்க | காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் விவகாரம்.. வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது பாஜக அமைப்பு செயலாளரான கேசவ விநாயகம் குறித்து சூர்யா சிவா தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 'கேசவ விநாயகம் முன் ”ஒரு பெண் ஆடைகள் இன்றி நின்றால் கூட திரும்பி பார்க்க மாட்டார்.” என்று தெரிவித்து இருக்கிறார். டெய்சியின் இந்த கருத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு மத்தியில் அரசியல் பேசும் ஆளுநர்...!விமர்சித்த அமைச்சர்!! 

அவ்வளவுதான் நம்ம நெட்டிசன்கள் பிடிச்சுகிட்டாங்க ..................................உடனே முகநூல், புலனம், டிவிட்டர் இருக்குற எல்லா சமூகவலைத்தளத்திலும் யாருப்பா?  அந்த கேசவ விநாயம்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க  அதுமட்டுமல்லாமல் அவரின் புகைப்படத்தை மையமாக கொண்டு மீம்ஸ்களும் பறக்க தொடங்கிடுச்சு 

யார் இந்த கேசவ விநாயகம்:

கேசவ விநாயகம் வெளியில் தெரிவதற்கான காரணம் அவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டதே காரணம். பாஜகவின் மாநில அமைப்பு  செயலாளர் கேசவ விநாயகம்.ஆர்.எஸ்.எஸ்- ல் முழுநேர பணியாளர்களுக்கு பாஜகவில் பணிகள் வழங்குவது வழக்கம் . அந்த அடிப்படையில் பதவி வழங்கப்பட்ட குமரி மாவட்டத்தை சார்ந்த் முழுநேர ஊழியர் தான கேசவவிநாயகம். இவருக்கு திருமணம் செய்துகொள்ளாமல் முழுநேர  ஊழியராக செயல்படுகிறார்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்க கூடிய நபர்களில் 95 % பேர் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.