உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..! மாண்புமிகு அமைச்சரான உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..! மாண்புமிகு அமைச்சரான உதயநிதி முத்துவேல் கருணாநிதி  ஸ்டாலின்..!

மாண்புமிகு அமைச்சர்

தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சரானார் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பதிவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். விழா மேடையில் அமர்ந்திருந்தனர்.

உதயநிதி உறுதிமொழி

உதயநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டபடி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத  முழுமுதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசியல் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு இணங்க அச்சமும், ஒருதலை சார்புனின்றி, விருப்பு வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன்.

மேலும் படிக்க: தாய் தந்தையிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் எனும் நான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் அமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன்  என்று உளமார உறுதிமொழிகிறேன்.

Image

இவ்வாறு உறுதிமொழியேற்ற பின்பு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாணம் மற்றும் இரகசியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என். ரவிக்கு மலர்க்கொத்து வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

- அறிவுமதி அன்பரசன்