நான் உதயநிதி ஸ்டாலினுடைய பி.ஏ!. என்ன ஒன்னும் பண்ண முடியாது!. பணம் கொடுத்து ஏமாந்த பெண்ணை கதி கலங்க வைக்கும் பலே கில்லாடி!.  

திருப்பத்தூர் மாவட்டம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்கள் வரை ஏமாற்றிய மோசடி ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான் உதயநிதி ஸ்டாலினுடைய பி.ஏ!. என்ன ஒன்னும் பண்ண முடியாது!. பணம் கொடுத்து ஏமாந்த பெண்ணை கதி கலங்க வைக்கும் பலே கில்லாடி!.   

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் அடுத்த புதூர் பகுதியை சேர்தவர் தேன்மொழி, இவர் வேலை தேடி சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது தோழியின் மூலமாக அறிமுகமான சென்னை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், தேன் மொழியிடம் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகின்றேன் எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்ப்பு உள்ளது, என்று ஆசை வார்த்தை கூறியது மட்டுமல்லாமல் வேலை வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய தேன்மொழி கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 4.50 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சொல்லது போல் ராஜேஷ் வேலை வாங்கிக்கொடுக்காமலும், வேலை இப்போது வரும், அப்போது வரும் என்று ஏமாற்று வந்துள்ளார்.

ஏமாற்றியது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம், மேலும் 5 பேரை உனக்கு வேலையும் கிடைக்கும் காசும் கிடைக்கும் என்று தேன் மொழியை தூண்டிவிட்டு பலரிடம் அரசு வேலை பெற்று தருவதாக கூறி லட்ச கணக்கில் பணத்தை கறந்துள்ள ராஜேஷ், அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அரசு வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் தேன்மொழியிடன் கேட்க தொடங்கி தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால் மன உடைந்த தேன்மொழி தற்கொலை முடிவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட அவரது உறவினர்கள் மோசடி மன்னன் ராஜேஷ் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணைக்காக ராஜேசை அழைத்துள்ளனர். அப்போது மோசடி மன்னன் ராஜேஷிடம் சீனிவாசன் என்ற காவலர் நெருங்கி பழக ஆரம்பித்து பணத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தேன்மொழி கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், கையூட்டு பெற்றுக்கொண்டு விசாரணையை கிடக்கில் போட்டு வந்துள்ளார் சீனிவாசன்.

இதனால் ராஜேஷ் சுதந்திரமாக எந்த கவலையும் இன்றி இருந்துள்ளார். அதுமட்டுமல்லாது தன்னை போலீசில் காட்டிக்கொடுத்த ஏமாந்த பெண்ணை செல்போனில் தாறுமாறாக மிரட்டியும் உள்ளார். இதேபோன்று வேலூர், ராணிப்பேட்டைஉள்ளிட்ட மாவட்டத்திலும் ராஜேஷிடம் பல பேல் பல லட்சம் வரை ஏமாந்ததாக சொல்லப்படுகிறது.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் செய்வதறியாமல் தவித்து வருவதுமட்டுமல்லாமல், வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் பணத்தை பெற்றி கொண்டு அவர்கள் தெரியும், இவர்கள் தெரியும், இத்தனை போலீஸ் தெரியும் என்றெல்லாம் சொல்லி மிரட்டி வரும் மோசடி ஆசாமியை காவல் துறையில் பிடித்து உரிய முறையில் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணம் பெற்று தர வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.