ஆர்.பி.உதயகுமார் ரூ.5,000 கோடி சொத்து சேர்த்தது எப்படி - ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி..!

ஆர்.பி.உதயகுமார் ரூ.5,000 கோடி சொத்து சேர்த்தது எப்படி - ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி..!

2008 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார், இப்போது ஐந்தாயி்ரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது எப்படி என ஒ. பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப் பியுள்ளார். ஆர். பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார் கோவை செல்வராஜ்:

அதிமுகவின் கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவும், ஓ. பி.எஸ் ஆதரவாளருமான கோவை செல்வராஜ், இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த 2008 ஆம் ஆண்டில் அண்ணா திமுகவிற்கு வருகை தந்த ஆர். பி.உதயகுமாரை, அம்மா அவர்கள் பாவம் என்று அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தின் பரிந்துரையின் பேரில்  வாய்ப்பு கொடுக்கப்பட்டு அமைச்சர் ஆனார். ஆனால் அன்றைக்கு (வாய்ப்பு கேட்ட போது) சைக்கிளில் அரை டவுசர் போட்டுக்கொண்டு சுற்றிகொண்டு இருந்த ஆ. பி.உதயகுமார், இன்றைக்கு ஐந்தாயி்ரம் கோடிக்கு மேல் உள்ள சொத்துக்கு எப்படி அதிபதி ஆனார் என்று கேள்வி எழுப் பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பணம் எல்லாம் யாரிடத்தில் இருக்கிறது, எங்கு வைக்கப்பட்டிருக்கிறது,  எந்த சொத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது, வெளிநாட்டு வங்கியில் என்ன இருக்கிறது, வெளிநாட்டில் எங்கெல்லாம் ஓட்டல் வைத்து நடத்துகிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியும் என்று தெரிவித்த அவர்,  அதற்கான பட்டியலையும் கொடுக்கவிருப்பதாகவும் கூறினார்.

ஆர். பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க உள்ளேன்:

தொடர்ந்து பேசிய அவர், ஆர். பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், திங்கட்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறையினரை சந்தித்து ஆர். பி.உதயகுமாரின் மீது சொத்துகுவிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்த பட்டியலை அவர்களிடம் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று கட்சியிலிருந்து நீக்கம்;இன்று செய்தியாளர்கள் சந்திப்பு:

முன்னதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அதிமுகவின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறி, நேற்று அதிமுகவில் இருந்து ஓ. பி.எஸ் மகன் உள்பட  ஆதரவாளர்கள் 18 பேரை பதவி நீக்கம் செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஓ. பிஎஸ் மகனும், அதிமுகவின் ஒரே மக்களவை எம் பியுமான  ரவீந்திரநாத், ஜெய பிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சையது கான், மருது. அழகுராஜ், கோவை செல்வராஜ்  உள்ளிட்ட ஓ பிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப் பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், ஆர். பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளது குறிப் பிடத்தக்கது.