10,000 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் - முதலமைச்சர் மு க ஸ்டாலின்!!!!

10,000 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்  - முதலமைச்சர் மு க ஸ்டாலின்!!!!

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25 ஆம் ஆண்டு பொன்விழா மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 16ஆம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது .அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி, கே.என் நேரு சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேடைப்பேச்சு

 ராணுவ வீரர்களுக்கு, காவல்துறையினருக்கு சீருடை இருப்பது போல, உங்களுக்கு கருப்பு சிவப்பு சீருடையோடு பார்க்கிறேன்.உங்களை பார்த்தால் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது.தொழிலாளர்களுடன் எப்போதும் எனக்கு நட்பு கலந்த மோதல் உள்ளது.தொழிலாளர் அணியினருடன் எப்போதும் மோதல் கலந்த நட்பு உள்ளது.அன்பகத்தை தொழிளாலர்கள் அணிக்கு தர கோரிக்கை வைக்கப்பட்டது... இளைஞர் அணி தலைவராக இருந்த நானும் இளைஞர் அணிக்கு உரிமை கோரினேன்...பல அணிகள் அன்பகம் கட்டிடத்தை கலைஞரிடம் கேட்டோம்.

மேலும் படிக்க | கனிமவள கொள்ளை : மறுமலர்ச்சி இயக்கம் மனு - 24-ம் தேதி தள்ளிவைத்த நீதிமன்றம்!!!

யார் அதிகம் நிதி தருக்கிறார்களோ அவர்களுக்கு அன்பகம் கட்டடம் என தலைவர் கூறினார்.11 லட்சம் நிதி திரட்டி அன்பகத்தை பயன்படுத்தினோம்.திமுக அடித்தட்டு மக்களுக்கான இயக்கமாக உள்ளது. திராவிட விவசாயிகள் இயக்கத்தை பெரியார் தொடங்கினார்.தனித்தனியாக இருந்த அணிகளை ஒன்றிணைத்தார் கலைஞர். 2008ல் பேரவைக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் கிடைத்தது.2012ல் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், தொமுச சண்முகம்  கலந்து கொண்டார். மே 1ம் தேதியை ஊதியத்தோடு கூடிய விடுமுறை தினமாக கலைஞர் அறிவித்தார்.பீடி, உப்பாளம், எண்ணெய் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க செய்தது கருணாநிதி தான்.

மேலும் படிக்க | திராவிட மாடல்: வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது - முன்னாள் அமைச்சர் காட்டம் !!!!

குறைந்தபட்ச போனஸ் 8.3 %, அதிகபட்ச போனஸ் 20% என மாற்றியவர் கருணாநிதி.தொழிலாளர் நல வாரியங்களில் கடந்த ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத ஒரு லட்சம் மனுக்களுக்கு பதில் கிடைத்துள்ளது. 10,000 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

ஜவுளி கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி வைக்க வேண்டும் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது.தொழிலார்களே...உழைப்போடு சேர்ந்து உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்
குடும்பத்தை கவனியுங்கள். கண்டிப்பாக பிள்ளைகளை உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும்... அதுதான் நீங்கள் கொடுக்கும் சொத்து... திராவிட மாடல் அரசு என்பது பாட்டாளிகளுக்கான அரசு.உழைக்கும் மக்களுக்கான அரசு.உங்களில் ஒருவனாக என்றும் இருப்பேன் என தெரிவித்தார்