மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

குன்னூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம்.

மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

குன்னூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 600 அடிப்படையில் வேலைக்கு சேர்த்த பிறகு,  ரூ.300 தருகிறார்கள். தங்களுக்காக அரசு நிர்ணயத்த சம்பளத்தை  கொடுங்கள் என கேட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்த சிறப்பு ஊக்க தொகையும் தரவில்லை. இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே அரசு நிர்ணயித்த சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். மற்ற அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்ததாரர்கள் பேசியபடி சம்பளம் வாங்குகிறார்கள். இந்த மருத்துவமனையில் மட்டும் வழங்குவதில்லை எனவே எங்கள் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.