"தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை நுழையவிட மாட்டோம்" - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை நுழையவிட மாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை நுழையவிட மாட்டோம்" - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக அரசு பின்பற்ற போவது தேசிய கல்வி கொள்கையா? அல்லது மாநில கல்வி கொள்கையா? என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நுழைய முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார் என தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டினுடைய மாநில கல்வி கொள்கையை பின்பற்ற இம்மாதத்திற்குள் குழு அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் நுழையாது; நுழையவும் விட மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்தார்.  

மேலும் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பொது நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்றும் நுழைவுத் தேர்வு எந்தவிதத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார் என்றும் பொன்முடி தெரிவித்தார்.