மெகா மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு... உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி...

பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள், எவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி, கோடி கணக்கில் பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த பணமோசடி வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதான அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.  

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், கணேசன் மற்றும் சுவாமிநாதன் இருவரும் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 

இதையடுத்து பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேசன், சுவாமிநாதன் ஆகியோர், எவ்வாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேள்வி எழுப்பிய நீதிபதி, நிதி நிறுவனத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர் எனவும் கேட்டார். மேலும், வழக்கு விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது எனக் கேள்வி எழுப்பியதோடும் பண மோசடி தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.