ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு... விசாரணையில் திருப்தி இல்லை - நீதிபதி திருப்தி...

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதிநிறுவன வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்று நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு... விசாரணையில் திருப்தி இல்லை - நீதிபதி திருப்தி...

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  நிதி நிறுவனத்திற்கு உதவியாக  செயல்பட்ட சோலை செல்வம் என்பவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அரசு தரப்பில், நிதி நிறுவன வழக்கு  பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், தற்போது பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி புகழேந்தி விசாரணையை நிலுவையில் இருக்கும்போது முக்கிய குற்றவாளியின் மனைவி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். ஏன் கீழமை  நீதிமன்றத்தில் முறையான வாதங்களை வைக்கவில்லையா என்றும், பல்வேறு குற்றச்சாட்டுகள் முறைகேடுகள் உள்ள நிலையில் ஜாமீனில் சென்றால் அவர்களிடம் உள்ள சொத்துக்களை எவ்வாறு பறிமுதல் செய்ய முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு திருப்பி செலுத்துவது இதனையெல்லாம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என விசாரணை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் முக்கிய குற்றவாளியின் மனைவி ஒரு வழக்கில்தான் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் இந்த வழக்கில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன்? வேறு வழக்குகளில் அவரை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை முறையாக நடைபெற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். இதனை கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றார். மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரிய சோலை செல்வம் என்பவர் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.