இன்றும், நாளையும் மிக கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்றும், நாளையும் மிக கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் 
புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை  டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  கன முதல் மிக கன மழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின்  ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.