அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் ...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் ...

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.