ஆதாரம் இருக்கு.. கைது செய்ய தைரியம் இருக்கா?.. அதுவும் 6 மணி நேரத்திற்குள் - ஆளும் கட்சிக்கு ஓபன் சவால் விட்ட அண்ணாமலை!!

ஆதாரத்துடன் தான் திமுக மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும், தைரியம் இருந்தால் தன்னை 6 மணி நேரத்திற்குள் கைது செய்யுங்கள் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.

ஆதாரம் இருக்கு.. கைது செய்ய தைரியம் இருக்கா?.. அதுவும் 6 மணி நேரத்திற்குள் - ஆளும் கட்சிக்கு ஓபன் சவால் விட்ட அண்ணாமலை!!

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, தமிழக முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து ஏன் கேள்வி கேட்க கூடாது எனக் கேட்டார்.  

எந்த வித சூழலையும் எதிர்ப்பதற்கு தான், சென்னை வந்துள்ளதாகவும், 6 மணி நேரத்தில் என்னை கைது செய்யுங்கள், இல்லையென்றால், நீங்கள் நாளை முதல் என்னை பற்றி பேச தகுதியற்றவர்கள் என்றும் சவால் விடுத்துள்ளார். எதற்காக முதலமைச்சர் டேன்ஜெட்கோ பிராஜக்ட்-ஐ பி.ஜி. ஆர். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தான் முதல்வரை உருவாக்க வந்திருப்பதாகவும், எப்போதும் முதலமைச்சராக நினைக்கவில்லை என்றும் கூறினார்.