குரூப் 4 தேர்வில் முறைகேடா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

குரூப் 4 தேர்வில் முறைகேடா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 450 பேர் தட்டச்சு பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றுள்ளதால் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் நேற்றைய தினம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்பிறகு, குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியது. 

இதையும் படிக்க : ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!

இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக, குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. 

தொடர்ந்து, இது குறித்து டிஎன்பிஎஸ்சி கூறும்போது,  ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும் என்றும், அந்த வகையில் தான், ஸ்டேனோ டைப்பிங் பயிற்சி பொறுத்தவரை காஞ்சிபுரம், சங்கரன்கோவில் என்பது கடந்த காலங்களிலும் அதிகமான தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர் எனவும் விளக்கமளித்துள்ளது.