தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து...

பக்ரீத் எனப்படும் தியாகத்திருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிழக ஆளுநர் , முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து...
இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 
இதே போன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்தாள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,இஸ்லாமிய பெருமக்கள் இறை நினைவோடும் தியாக சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில் உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
விட்டுக்கொடுத்தலும்,ஈகை புரிதலும் , மத நல்லிணக்கமும்  மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும் என்றும் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் ,ஈ.பி.எஸ்  கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளனர்.  
 
பக்ரீத் பண்டிகை  தியாகத்தை உணர்த்தும் பாடமாகும்  இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும் என்றும் அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். .
 
அஞ்சுவதும் வணங்குவதும் இறையை மட்டுமே என்பதை இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. அதனை பண்பாட்டுக் கூறுகளினூடாக இன்றும் விளக்குகிற ஒரு பெருவிழாதான் பக்ரீத் பண்டிகையாகும். இத்தகைய நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடிமக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.