கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை அரசே நியமிக்கும் - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு  துணைவேந்தரை அரசே நியமிக்கும் - சட்டப்பேரவையில்  மசோதா  தாக்கல்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தரை அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக சார்பில் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை அரசே நியமிக்கும் என்கிற  சட்ட மசோதாவை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். 

அதில், குஜராத், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளன. அதன்படி கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 12 மாநில பல்கலைக் கழகங்களிலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவில், துணைவேந்தரை நியமிப்பதற்கான வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என சட்ட மசோதாவில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க } ட்சியின் தலைமை ஒப்புதல் கொடுத்தால் நீதிமன்றத்தை முற்றுகையிடவும் நாங்கள் தயங்க மாட்டோம்"....-ரஞ்சன் குமார்

மேலும் துணைவேந்தரை நீக்குவதற்கான அதிகாரம் என்பது,  உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது அரசின் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான அலுவலர் தலைமையில் விசாரணை அமைத்தே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இந்த மசோதாவை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தாக்கல் செய்த போது, ஆரம்ப நிலையிலேயே அதிமுக எதிர்ப்பதாக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிவு செய்தார்.

இதையும் படிக்க } தேர்தல் ஆணையத்தின் முடிவால் தர்மம் வென்றுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!