"இந்திய மக்கள் அனைவரும்  ஒரே குடும்பமாக, வலிமையாக இருக்க வேண்டும்" ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

"இந்திய மக்கள் அனைவரும்  ஒரே குடும்பமாக, வலிமையாக இருக்க வேண்டும்" ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

இந்தியா, ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது என தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டு மக்கள் அனைவரும்  ஒரே குடும்பமாக வலிமையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

பாஜகவின் மறைந்த மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான தீனதயாள் உபத்தியாயா குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில் ஆளுநர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் பேசிய ஆளுநர், 1956ல் மதராஸ் பிரிக்கப்படுவதற்கு முன்பு, அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். அதன் பிறகு ஆங்கிலேயரின் சதியாலும், இந்திய தோழர்களாலும் இது போன்ற பிரிவினைகள் உருவாகிவிட்டது. நூற்றாண்டுகளாக நமக்கு சொந்தமான இடத்தில வாழ்ந்து நிலையில், தற்போது நம்மை புலம் பெயர்ந்தவர்கள் என சொல்கிறார்கள், எனக் கூறியுள்ளார்.

மேலும், கார்ல்ஸ் மார்க்ஸ் மற்றும் டார்வின் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சுட்டிக்காட்டி பேசிய அவர், கார்ல் மார்க்சின் கோட்பாடுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இந்தியா, ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது, நாட்டு மக்கள் அனைவரும்  ஒரே குடும்பமாக வலிமையாக இருக்க வேண்டுமெனவும், நாட்டில்  ஒவ்வொரு தனி மனிதர்களின் உரிமை பாதுகாக்கபட வேண்டியது அவசியம் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || 7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56!!