அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருக்க தடை.. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் வைத்திருப்பது தடை என நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருக்க தடை.. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை

நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து பேசுவதாலும் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

வாகன ஓட்டிகள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போனை எடுத்துச் செல்லக்கூடாது. நடத்துநரிடம் செல்போனை ஒப்படைத்து, வேலை முடிந்ததும் பெற்றுக்கொள்ள வேண்டும். பணியின் போது ஓட்டுநர்கள் செல் போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.