சென்னையில் தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.200 குறைவு!!

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.200 குறைவு!!

சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது.  

நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து, 8 கிராம் 38 ஆயிரத்துக்கும் கீழாக சரிந்தது. இந்தநிலையில் 2வது நாளாக தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 715 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல் ஒரு சவரன் விலை 200 சரிந்து, 37 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 66 ரூபாயும், பார் வெள்ளி 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.