45 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...இன்று அதிரடி குறைவு...!

45 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...இன்று அதிரடி குறைவு...!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.  

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய தினம், சவரனுக்கு 352 ரூ உயர்ந்து ஒரு சவரன் 45, 760 க்கு விற்பனையானது. இதன்மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. 

இதையும் படிக்க : ராகுலின் பதவி நீக்கத்தை கண்டித்து... காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்...!

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 45 ஆயிரத்து,  200 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து, 650 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

இதேபோன்று, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 81 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 81 ஆயிரத்து, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.