பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா....

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா நடைபெற்றது.

பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா....

இராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு, கலைக்குளம் கிராமங்களுக்கு இடையில் உள்ள கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம், இங்கு வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா நடைபெறுகிறது..

இந்த திருவிழாவின் போது அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லைப்பிடாரி அம்மனுக்கு அங்குள்ள மணல்களால் பீடம் அமைத்து அலங்காரம் செய்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு பலியிட்ட கிடாய் களின் தலைகளை அந்த பீடத்திற்கு எதிரில் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

பூஜை முடிந்த பின்னர் சாத  உருண்டைகளை பனை ஓலையால் பின்னப்பட்ட மட்டையில் வைத்து, அதனுடன் பலியிட்ட கிடாய் கறிகளை விருந்தாக வைத்து வருகை தந்த அனைத்து கிராம மக்களையும்  வரிசையில் அமர வைத்து பரிமாறப்பட்டது.

அனைவரும் சாப்பிட்ட பின் மீதமுள்ள சாப்பாடு வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் சாப்பாடுகள் அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கு கமுதி மற்றும்  முதல்நாடு, முஸ்டக்குறிச்சி உள்ளிட்ட 50 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.